One More Gold Sri Lanka CommomWealth Game 2011
One More Gold Sri Lanka Common Wealth Game 2011 : 11ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை மற்றுமொரு தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளது. | |
11ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்றைய தினம் நடைபெற்ற 1500 மீற்றர் ஒட்டப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணியின் தலைவர் சமிந்த அபேகோன் இந்த தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். அத்துடன், இந்த போட்டியில் 3ஆவது இடத்தையும் இலங்கையின் ஒட்ட வீரரான P.H. சமல் பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை, 11ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 68 பதக்கங்களை பெற்று முதலாவது இடத்தில் தொடர்ந்தும் உள்ளது. இதன்படி, இந்தியா 41 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக 68 பதக்கங்களையும், பாகிஸ்தான் 6 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கலாக 31 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன், 6 தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களுடன் பங்களதேஷ் 3ஆவது இடத்தையும், 4 தங்கம், 13 வெள்ளி, 21 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களுடன் இலங்கை 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் 1 தங்கம், 5 வெண்கலம் அடங்கலாக 6 பதக்கங்களை பெற்று 5ஆவது இடத்தை பெற்றுள்ள அதேவேளை, நேபாளம் 8 வெண்கல பதக்கங்களுடன் 6ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |